தமிழக அரசுக்கு சீமான் திடீர் கோரிக்கை | Seeman

Update: 2024-07-31 16:22 GMT

தொழில் வரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில் வரியை 35 சதவீதம் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கொரோனா கால தொழில் முடக்கம், ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் தற்போது மீண்டு வரும் நிலையில், தொழில் வரி உயர்த்தப்பட்டிருப்பது அவர்களை முடக்க வழி வகுக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் தொழில் வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டுமென அவர் வலியுறுத்தியிள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்