"மதுரைக்கு எய்ம்ஸ் எப்போ வரும்..!"ஆவேசமான ஆ.ராசா... அமைதியாக ஒப்புக்கொண்டே ஜே.பி.நட்டா

Update: 2024-08-02 13:24 GMT

மதுரை எய்ம்ஸ் தாமதத்தை ஏற்றுக் கொள்வதாகவும், விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக எம்பி ஆ ராசா கேள்வி ஒன்றை முன் வைத்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், மத்திய அமைச்சர் வழங்கிய எழுத்து பூர்வமான பதில் தமக்கு அதிருப்தி அளிப்பதாக தெரிவித்தார். தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் மீது இது சரியான அணுகு முறையா? என்று கேள்வி எழுப்பிய ஆ.ராசா, மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, உறுப்பினரின் உணர்வுகளை மதிப்பதாக தெரிவித்தார். சில தொழில்நுட்ப காரணங்களால் மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதம் ஆகி இருப்பதாக குறிப்பிட்ட அவர், கால தாமதம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதாக கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் துவங்கி விட்டதாக தெரிவித்த ஜே.பி.நட்டா, கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படுவதை காண்பீர்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்