காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-17 00:59 GMT
  • 543 மக்களவை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் அறிவிப்பு... ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்டத் தேர்தல்... ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தொடர்ந்து தேர்தல் நடக்கிறது...
  • தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படும்... மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது அன்று தெரியும்...
  • தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்... விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு...
  • மார்ச் 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது... வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 30ம் தேதி என அறிவிப்பு...
  • அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் ஏப்ரல் 19 சட்டமன்ற தேர்தல் நடக்கிறது... ஆந்திரா மாநில சட்டப்பேரவைக்கு மே 13ம் தேதியும், ஒடிசா சட்டப்பேரவைக்குமே 13 தொடங்கி நான்கு கட்டமாக தேர்தல் அறிவிப்பு...
  • நாடு முழுவதும் 96 கோடியே 88 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி... 10 லட்சத்து 50 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிப்பு... 
  • வரும் ஏப்ரல் 1ம் தேதி 18 வயது நிறைவடைபவர்கள் வாக்களிக்க தகுதி ... சட்டவிரோத ஆன்லைன் பரிமாற்றம் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் தகவல்...
  • தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, அதிரடியாக சோதனையில் இறங்கிய அதிகாரிகள்... உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல்... 
  • மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு, முன்னதாக பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை... கோடை விடுமுறை முடிந்து ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு...
  • மகளிர் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப்போட்டி... டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ள நிலையில், கோப்பையை வெல்லப்போவது யார் என்று எகிறும் எதிர்பார்ப்பு... 
Tags:    

மேலும் செய்திகள்