"உங்க வீட்டுக்குள்ளதாண்டா இது...பாரு" - சவுக்கு சங்கருக்கு வந்த வீடியோ கால் மிரட்டல்

Update: 2025-03-24 13:04 GMT

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில் மலம் கலந்த கழிவுநீர் ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்வாசல் கதவை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர், வீடு முழுவதும் மலம் கலந்த கழிவுநீரை ஊற்றிவிட்டு சென்றுள்ளனர். யூடியூபில் தூய்மை பணியாளர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதால், இந்த செயலில் சிலர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சவுக்கு சங்கர் எங்கே என கேட்டு அவரது தாயார் கமலாவை அவர்கள் மிரட்டிவிட்டு சென்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே, சவுக்கு சங்கரின் வீட்டில் கழிவுநீரை ஊற்றி, வீட்டை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்