மே.வங்கத்தில் விடாமல் எரியும் `தீ'... களமிறங்கும் பாஜக... ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நடந்த போராட்டத்தில், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை
கண்டித்து பாஜக மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு
அழைப்பு விடுத்தது. இதற்கு தடை கோரிய பொதுநல மனுவை
விசாரணைக்கு ஏற்க கொல்கத்தா உயர்நீதிமன்றம்
மறுத்துவிட்டது. பொதுநல மனுக்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.