இலங்கை வரலாற்றில் முதல் முறையாக களமிறங்கும் ஒற்றை தமிழன் - உலகமே திரும்பி பார்த்த தமிழர்கள் முடிவு

Update: 2024-09-18 06:41 GMT

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக களமிறங்கும் ஒற்றை தமிழன் - உலகமே திரும்பி பார்க்க ஒன்று கூடி தமிழர்கள் எடுத்த முடிவு

இலங்கை அதிபர் தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நேரடி கள நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....

பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு கலவரம் என களேபர காடாக இருந்து தற்போது மீண்டு வரும் இலங்கையில் அடுத்த அதிபர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இலங்கையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தலில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சேவின் மகன் நாமல் ராஜபட்ச உள்பட 38 போ் போட்டியிடுகின்றனா்.

குறிப்பாக சுயேச்சை வேட்பாளர்கள் அல்லது பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளர்கள் பலர் களமிறங்கியுள்ளனர்.

இதில் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டுள்ளதாக கூறி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் தற்போதைய அதிபரும் சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்கே..

ஏற்கனவே 1999 மற்றும் 2005ல் அதிபர் தேர்தலில் நின்று தோல்வியை தழுவிய இவர், பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இடைக்கால அதிபராக பதவி வகித்து வருகிறார்..

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த இவர், முதல்முறையாக சுயேட்சையாக போட்டியிடுவது கவனம் பெறுகிறது.

மேலும் பதவிக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழர் பொது வேட்பாளராக களமிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தச் சூழலில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் வாக்கு யாருக்கு என்ற கேள்வியும் எழ, மக்களிடையே அதிருப்தியே நிலவுகிறது..

இந்த சூழலில் பேசிய யாழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், போர் முடிந்து பல காலம் ஆகியும், தமிழர்களுக்கான இடம் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

பொருளாதார சூழல் மக்களின் தலையாய பிரச்சனையாக உள்ள நிலையில், யார் ஆட்சிக்கு வந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை என புலம்புகின்றனர் இலங்கை வாழ் தமிழர்கள்..

இலங்கை வாழ் தமிழர்களை பொறுத்தவரை நாட்டில் தற்போது அதிகரித்துள்ள விலைவாசியை கட்டுப்படுத்தி வாழ்வாதாரத்திற்கு தேவையான வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வசதிகளை உருவாக்கித் தர முன் வரும் வேட்பாளருக்கே வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்