வங்கதேசத்தின் அடுத்த பிரதமர் யார்? - இந்தியாவுக்கு ஆரம்பித்தது தலைவலி

Update: 2024-08-06 09:34 GMT

வங்கதேச பிரதமராக நோபல் பரிசு வென்ற முகமது யூனஸை நியமிக்க வேண்டும் என்ற மாணவர்கள் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வங்க தேச அரசு பணிகளில் இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற போராட்டங்கள் தீவிரமடைந்தால், பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராணுவ ஹெலிகாப்டார் மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றார். திங்கள் அன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 135 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. வன்முறையாளர்களை அடக்க, காவல் துறையினர்

நடத்திய துப்பாக்கி சூட்டில் 50 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய குழுவினர், கிராமீன் வங்கி நிறுவனர் முகமது யூனஸை வங்க தேச பிரதமராக நியமிக்க வேண்டும் என்று வீடியோ மூலம் கூறியுள்ளனர். நுண் கடன் திட்டத்தை பரவலாக்கியதற்காக முகமது யூனஸுக்கு 2006இல்

நோபல் பரிசு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வங்க தேச அதிபர் முகமது சகாபுதீன் இடைக்கால அரசு ஒன்றை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கிடையே எதிர்கட்சியான

பங்களாதேச தேசிய கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான்

விரைவில் நாடு திரும்ப உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்