"நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க அனுமதி மறுப்பு.." தேசிய தேர்வு முகாம் கொடுத்த விளக்கம்
தேர்தலில் வாக்களித்ததற்காக விரலில் மை வைக்கப்பட்டவர்கள், நுழைவுத் தேர்வுகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தகவல் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, அவ்வாறு பரவக்கூடிய தகவலில் உண்மைத் தன்மை இல்லையெனவும், அது வதந்தி எனவுக் விளக்கமளித்துள்ளது. மேலும், போலியான செய்திகளை நம்பாமல் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டுமெனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.