சந்திரயான்-3 விண்கலத்தின் பயணப்பாதையை விவரிக்கும் தொகுப்பு உங்கள் பார்வைக்கு
நிலவில் ஆய்வு செய்ய இஸ்ரோ வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம், எல்.வி.எம். 3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
விண்கலம் 36,500 x 170 கிலோ மீட்டர் புவி சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டது
ஜூலை 15 ஆம் தேதி முதலில் விண்கலம் 41762 x 173 கிலோ மீட்டர் புவி சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது.
இப்படி 5 முறை விண்கலம் பாதை உந்துவிசை வாயிலாக உயர்த்தப்பட்டது.
இறுதியாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி, புவி சுற்றுவட்டப் பாதையில் சுற்றிய சந்திரயான்-3 விண்கலம் புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
5 நாள் பயணத்துக்குப் பிறகு ஆகஸ்டு 5 ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது.
பிறகு விண்கலம் பாதை தரையை நோக்கி குறைக்கப்பட்டது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி விண்கலம் நிலவில் 170 x 4,313 கிலோ மீட்டர் சுற்றுப்பாதைக்கு இறக்கப்பட்டது.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி 174 x 1437 கிலோ மீட்டர் சுற்றுப்பாதைக்கும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி 151 x 179 கிலோ மீட்டர் சுற்றுப்பாதைக்கு குறைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 16 ஆம் தேதி முக்கிய கட்டமாக 153 x 163 கிலோ மீட்டர் சுற்றுப்பாதைக்கு இறக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி நிலவின் தரையில் இருந்து 153 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலம் இருந்தபோது, உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது.
லேண்டரின் சுற்றுவட்டப் பாதையின் உயரத்தை குறைத்து, நிலவில் அதை தரையிறக்குவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 18 ஆம் தேதி முதல்கட்டமாக திரவ வாயு எந்திரம் வாயிலாக நிலவின் தரையில் இருந்து 113 கிலோ மீட்டர் உயரம் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டர் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி 2-வது கட்டமாக லேண்டர் சுற்றுவட்டப் பாதையின் உயரம் 25 x 134 கிலோ மீட்டர் என வெற்றிகரமாக குறைக்கப்பட்டது.
நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வரப்பட்ட லேண்டர், குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவிலும் சுற்றியது.
தொடர்ந்து விண்கலம் எந்த கோணத்தில் உள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். திடீரென லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான நேரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது.
23 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பதிலாக 19 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.04 மணிக்கு தரையிறக்கப்படும் என இஸ்ரோ அறிவித்தது.
உலகமே வியந்து காத்திருக்கும் தருணத்தில், விண்கலம் வெற்றியை எட்டுவதில் மிகவும் கடினமான கட்டத்தில் வியக்கத்தகு சாதனையை இந்தியா தனதாக்கும், இதுவரையில் யாரும் தொடாத நிலவின் கரடுமுரடான தென்துருவத்தில் தடம்பதித்து சரித்திரம் படைக்கும் என்பதே எலோரது எதிர்பார்ப்பும், நம்பிக்கையுமாக உள்ளது.
ஜூலை 14, சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது
36,500 x 170 கி.மீ. புவி சுற்றுப்பாதையில் நிறுத்தம்
ஜூலை 15, 41762 x 173 கி.மீ. புவி சுற்றுப்பாதைக்கு உயர்வு
விண்கலம், 5 முறை புவி சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது
ஆக.1, விண்கலம் நிலவை நோக்கி பயணம்
ஆக. 5, நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது
விண்கலம் நிலவில் தரையை நோக்கி பாதை குறைப்பு
ஆக. 6, சுற்றுப்பாதை 170 x 4,313 கி.மீட்டருக்கு குறைப்பு
ஆக. 9, 174 x 1437 கி.மீ - ஆக. 14, 151 x 179 கி.மீ. சுற்றுப்பாதை
ஆக.16, சுற்றுப்பாதை 153 x 163 கி.மீட்டருக்கு குறைப்பு
ஆக.17, உந்துகலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிப்பு
லேண்டர் சுற்றுப்பாதை குறைப்பு, கண்காணிப்பு
ஆக.18, சுற்றுப்பாதை 113 x 157 கி.மீட்டருக்கு குறைப்புChandrayaan-3 in the final challenge - the historic journey that shocked the world
ஆக. 20, சுற்றுப்பாதை 25 x 134 கி.மீ. ஆக குறைப்பு