மெகா திட்டத்தை மேடையில் போட்டு உடைத்த சந்திரபாபு நாயுடு
ட்ரோன் தலைநகராக ஆந்திராவை மாற்ற 300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். குண்டூர் மாவட்டம், மங்களகிரியில் 2 நாட்கள் ட்ரோன் உச்சி மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், டிரோன்கள் மூலம், நகரங்களில் போக்குவரத்தை சரி செய்வது, விவசாய செயல்முறைகளை மேம்படுத்துவது, சுகாதாரத்தில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். டிரோன் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக ஆந்திராவை மாற்றும் வகையில் கர்னூல் மாவட்டம் ஓர்வகல்லுவில் 300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என ஆந்திர முதல்வர் அறிவித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் 5 ஆயிரத்து 500 ட்ரோன்கள் மூலம் சாகச பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடந்தது.