ரஜினி நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் புதிய அப்டேட்

Update: 2024-08-29 23:41 GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. படத்தில், ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், மலையாள நடிகர் சவுபின் ஷஹீர் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவும் கூலி திரைப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நாகார்ஜுனாவின் பிறந்த நாளையொட்டி, அவரின் போஸ்டரை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பிரபல இந்தி நடிகர் அமிர்கான், கூலி திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்