புத்தாண்டில் அமெரிக்காவை நிலைகுலைய வைத்த தாக்குதல் - உலகை உலுக்கியவனின் திடுக்கிடும் பின்னணி

Update: 2025-01-02 08:53 GMT

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் தாக்குதல் தொடர்பாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஷம்சுத்-தின் ஜப்பார் யார் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 42 வயதான அமெரிக்க குடிமகன் ஷம்சுத்-தின் ஜப்பார் டெக்சாசைச் சேர்ந்தவர்...

இப்போது ரியல் எஸ்டேட் முகவராக அறியப்படும் ஷம்சுத், இராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்...

2007 முதல் 2015 வரை ராணுவத்தில் மனித வள நிபுணராகவும், தகவல் தொழில்நுட்ப நிபுணராகவும் பணியாற்றியதாகவும், பின்னர் 2020 வரை ராணுவத்தில் அவசர சேவைக்காக மட்டும் பணிபுரிந்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 2009 முதல் ஜனவரி 2010 வரை அமெரிக்க ராணுவம் சார்பாக ஆப்கானிஸ்தானில் பணியில் இருந்த நிலையில் ஸ்டாஃப் செர்ஜன்ட் ஆக பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்...

இதற்கு முன் ஷம்சுத் முறையான லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதற்காக 2 முறை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், 2 முறை திருமணம் செய்துள்ளார்.

2022ல் அவரது 2வது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின் விவாகரத்து வழக்கைக்கூட சமாளிக்க முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த சூழலில் தான் அவர் நியூ ஆர்லியன்ஸ் தாக்குதல் தொடர்பாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்