ரஷ்யாவும் உக்ரைனும் மாறி மாறி ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. பெல்கோரோட், குர்ஸ்க், வோரோனேஜ், பிரையன்ஸ்க் மற்றும் ரோஸ்டோவ் உள்ளிட்ட பகுதிகளில் உக்ரைனின் 30க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு பிரிவு சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கலுகா, சரன்ஸ்க், பென்சா மற்றும் சரடோவ் பிராந்தியத்தில் உள்ள விமான நிலையங்களில் தற்காலிக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் உக்ரைனில் ரஷ்யா 111 ட்ரோன்களை ஏவியதாகவும், அதில் 63 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைன் தேசிய வங்கி கட்டடம் ஒன்றில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பிறகு தீ அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.