அமெரிக்காவில்15 பேரை காவு வாங்கிய அரக்கன்..தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா..உடைந்த மர்மம்..
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரத்தில் தாக்குதல் நடத்தியவரின் விவரங்களை FBI வெளியிட்டுள்ளது.
நியூ ஆர்லியன்ஸ் நகரின் போர்பன் தெருவில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த வாகனம் கூட்டத்திற்குள் புகுந்தது. திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 15 பேர் உயிரிழந்தனர். மேலும், வாகனத்திலிருந்து கிழே இறங்கிய நபர் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார். அவரை, போலீசார் சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே தாக்குதல் நடத்தியவரின் பெயர் ஷம்சுத்-தின் ஜப்பார் என்றும், 42 வயதான அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் கொடி இருந்ததால், பயங்கரவாத இயங்கங்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.