மஸ்க்கிற்கு சென்ற அதிர்ச்சி செய்தி..அதிபர் ட்ரம்ப் ஹோட்டல் முன் நடந்த அதிபயங்கரம் | Elon Musk

Update: 2025-01-02 02:22 GMT

அமெரிக்காவில் டிரம்ப் ஓட்டல் முன்பு டெஸ்லாவின் சைபர் டிரக் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லாவின் சைபர் டிரக், திடீரென பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனால், ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தீவிரவாத சம்பவமா என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், டெஸ்லாவின் உயர் அதிகாரிகள் குழு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்