லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஹீத்ரூ Heathrow விமான நிலையத்தில், விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. விமான நிலையத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யும் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து விமான சேவை ஒருநாள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தீ முழுமையாக அணைக்கப்பட்டு, விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து வடமேற்கு பகுதியில் உள்ள மான்செஸ்டர் Manchester விமான நிலையம் மற்றும் லண்டனின் தெற்குப் பகுதியில் உள்ள கேட்விக் Gatwick விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு வந்தடைந்தன.