நீதிமன்றம் போட்ட உத்தரவு...மீண்டும் அதே இடத்தில் பாரதமாதா சிலை - மகிழ்ச்சியின் உச்சத்தில் பாஜகவினர்
விருதுநகரில் வருவாய்த்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பாரதமாதா சிலை, நீதிமன்ற உத்தரவுபடி பாஜகவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.விருதுநகர் பாஜக அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுமதியின்றி வைக்கப்பட்ட பாரத மாதா சிலையை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். இதை எதிர்த்து பாஜகவினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, பாரதமாதா சிலையை ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கியது. இதனடிப்படையில், தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதமாதா சிலை பாஜகவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலையை பெற்றுக்கொண்ட பாஜகவினர், மலர்களால் அலங்கரித்து, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றனர்.