"Sports ல் மட்டும் தான் போதைப் பழக்கத்தை ஒழிக்க முடியும்"" - தடகள சங்க தலைவர் | Viluppuram
விழுப்புரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாநில அளவிலான மாரத்தான் நடைபெற்றது. மாரத்தானை மாவட்ட ஆட்சியர் பழனி, தமிழ்நாடு தடகள சங்க மாநில செயலாளர் லதா, விழுப்புரம் மாவட்ட தடகள சங்கத் தலைவர் பொன்னுசாமி கார்த்திக் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் எம்.பி. கவுதமசிகாமணி, தடகள சங்க நிர்வாகிகள் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர். போதைப் பழக்கத்தை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும் என்றால் இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்று பொன்னுசாமி கார்த்திக் கூறியுள்ளார்.