இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு...
8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில், வரும் 11ம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என, ரயில்வே அறிவிப்பு...
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சென்னை அடுத்த முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவு கப்பல் சேவை தொடக்கம்...
காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகம் செயல்படும் என படகு சேவை வழங்கும் நிறுவனம் தகவல்...
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்...
முறையாக வழக்கு விசாரணை செய்யவில்லை என்ற புகாரில், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி கைது...
குற்றவாளி என கருதப்படும் சதீஷ்க்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. 103வது வட்டச் செயலாளர் சுதாகரும் கைது...
திருட சென்ற வீட்டில், பொருட்கள் கிடைக்காததால் பெண்ணிற்கு முத்தம் கொடுத்து சென்றதிருடன்...
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்...
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்...
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் அறிவிப்பு...