வேலூர் மாவட்டம் காந்தி கணவாய் பகுதியில், ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமரா, சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்து ஒலி எழுப்பிய காட்சி வெளியாகியுள்ளது. துருவம் பகுதியில் சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, வனப்பகுதியை ஒட்டி ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டன. இந்நிலையில், காந்தி கணவாய் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானவுடன், ஒலிப்பெருக்கியில் சிறுத்தையை அச்சுறுத்தும் வகையில் ஒலி எழுப்பப்பட்டது. இதனை கேட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடி பதுங்கியது.