``நான் இருக்கேன்.. பயப்படாதீங்க’’ - செக்கை கையில் தந்து தோளில் தட்டிக்கொடுத்த அமைச்சர் பொன்முடி
``நான் இருக்கேன்.. பயப்படாதீங்க’’ - செக்கை கையில் தந்து தோளில் தட்டிக்கொடுத்த அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டத்தில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, கனமழை பெய்ததால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நீர்நிலைகளில் மூழ்கியும் விழுப்புரம் மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்கட்டமாக, 12 பேரின் குடும்பத்தினரை அமைச்சர் பொன்முடி சந்தித்து ஆறுதல் கூறி, தலா 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், தங்களுக்கு குடியிருப்பு வேண்டும் என்றும், தங்கள் பிள்ளைகளின் கல்வி செலவுக்கு அரசு உதவ வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு தர வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.