NH-ல் பீர் குடித்து கொண்டு பைக்கில் பயணம்.. இளைஞர்களின் உச்சகட்ட அட்டகாசம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பீர் குடித்தவாறு சென்ற இளைஞரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் என்ற இடத்தில், இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்கின்றனர். அப்போது, பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் பீர் குடித்தபடி பயணித்ததுடன், பீர் பாட்டிலை சாலையிலேயே அலட்சியமாக வீசுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.