சும்மா போனவரை போட்டோ எடுக்க சொன்ன டூரிஸ்ட்ஸ் - கடைசியில் அதுவே அவரின் மூச்சை நிறுத்திய கொடூரம்
#kanniyakumari #photography
குமரிக்கு சுற்றுலா வந்தவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நபர் சொகுசு கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
திருச்சியைச் சேர்ந்த பால சுப்பிரமணியம் குமரி 4 வழி சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்தார்... இன்று காலை அவர் வழக்கம்போல, சாலையோரம் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்... அப்போது குமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள் தங்களைப் புகைப்படம் எடுத்துத் தருமாறு பால சுப்பிரமணியனிடம் உதவி கேட்டனர்... அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாலசுப்பிரமணியன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த சொகுசு கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.