பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு.. சிறப்பு ரயில் எங்கே இருந்து செல்லும்? | Pongal
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில், அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் - தாம்பரம் இடையிலான வாரம் இரு முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் ராமநாதபுரத்திலிருந்து 10, 12 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மதியம் மூன்று முப்பது மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் 11, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில், 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரவு 11-30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் சந்திப்பிலிருந்து புறப்படுகிறது.