கதிகலங்கி நிற்கும் மக்கள் ... கார் உள்ளே யார்..? - அதிர வைக்கும் காட்சி

Update: 2024-12-27 11:36 GMT

திருச்செந்தூா் அருகேயுள்ள காயாமொழியில் ஆடுகளை காரில் விரட்டிச் சென்று திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், காயமொழி, வள்ளுவர் நகரில் கடந்த சில நாட்களில் 20 ஆடுகள் திருடு போனது. இந்த நிலையில் வெள்ளை நிற சொகுசு காரில் வந்த மர்மநபர்கள், வீட்டின் முன் படுத்திருந்த ஆடுகளை காரில் விரட்டிச் சென்று திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பொங்கல் மற்றும் புத்தாண்டிற்கு விற்பனைக்காக வளர்க்கப்படும் ஆடுகள், திருடப்பட்டிருப்பது உரிமையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படியும், இரவு நேர ரோந்துப்பணியை தீவிரப்படுத்துமாறும் போலீசாருக்கு அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்