"காவல் பணியில் பாதுகாப்பு இல்லை" - ராஜினாமா செய்த போலீஸ் சொன்ன திகில் தகவல் | Tenkasi | TN police

Update: 2024-12-28 02:16 GMT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணி புரியும் பிரபாகரன், காவல்துறை தலைவருக்கு எழுதிய ராஜினாமா கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்கள் இன்றி டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில் எம்-சாண்ட் மணல் மற்றும் ஜல்லி கடத்தலில் ஈடுபட்ட நபர்களை வழிமறித்து விசாரித்த போது, மிரட்டும் பாணியில் பேசி அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். தன்னை மிரட்டியது பற்றிய வீடியோ ஆதாரங்களை காவல் ஆய்வாளர் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எனவே தமிழக காவல்துறையில் பணிபுரிவது அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். காவலர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தாலும், அதன் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காததால். முதல் நிலைக் காவலர் பணியில் இருந்து விடுவிக்க கோரி டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்