48-வது சென்னை புத்தக கண்காட்சியை திறந்து வைத்த துணை முதல்வர் | Deputy CM Udhayanithi | Chennai
தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், 48வது புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் வெள்ளிக்கிழமையன்று மாலை தொடங்கியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். இதில், மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிப்பில் ஆன பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியையும் அவர் திறந்து வைத்தார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் பல்வேறு தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. புத்தக கண்காட்சியில், 2 லட்சம் சதுர அடியில் 900 அரங்குகள் புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களும் இடம் பெற்று இருக்கின்றன. இன்று தொடங்கியுள்ள புத்தக கண்காட்சி, ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.