18 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் - தமிழக சுகாதார துறை உத்தரவு
பிறந்தது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை பாதிக்கும், 30 மருத்துவ நிலைமைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க, ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. பிறப்பிலேயே குறைபாடுகள், வளர்ச்சி தாமதங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிய, 6 வயதுக்குட்பட்ட 38 லட்சம் குழந்தைகள் ஆண்டுக்கு 2 முறை அங்கன்வாடி மையங்களில் பரிசோதிக்கப்படுகின்றனர். இந்த பரிசோதனை மேற்கொண்ட ஒரு கோடியே 45 லட்சம் குழந்தைகளில், ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் நிபுணர் ஆலோசனைக்காக பரிந்துரைக்கப்பட்டு, இரண்டாயிரம் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் நாட்களில் RBSK திட்டத்தை துரிதப்படுத்தி, குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்.