தமிழக சட்டப்பேரவையில் உரை வாசிப்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி 2வது முறையாக புறக்கணித்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர், தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். 2025ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம் இன்று தொடங்கிறது. சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையை வாசிக்காமலேயே அவையில் இருந்து வெளியேறினார். 2023ஆம் ஆண்டில் பேரவையில் உரையை வாசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயரை வாசிக்காமல் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.