ஆளுநர் உரையில் இருந்தது என்ன? - வாசித்த சபாநாயகர் அப்பாவு

Update: 2025-01-06 14:20 GMT

தமிழகத்தில், வறுமையை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில்,

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தமிழ்நாடு இலக்காக கொண்டுள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டு முதல் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.15 கோடி குடும்பங்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும், காலை உணவுத் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 17.53 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் 3.52 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 14.68 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதாகவும்,

போதைப் பொருட்களுக்கு எதிராக பாரபட்சமற்ற கடுமையான அணுகுமுறையை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு அனுப்பியுள்ள மதுரை மற்றும் கோயமுத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீர் செய்ய தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநில அரசு கோரிய 6 ஆயிரத்து 675 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்