தமிழகத்தில் விமரிசையாக தொடங்கிய கந்த சஷ்டி திருவிழா.. முருகனை பார்த்து உருகி நிற்கும் பக்தர்கள்
தமிழகத்தில் விமரிசையாக தொடங்கிய கந்த சஷ்டி திருவிழா.. முருகனை பார்த்து உருகி நிற்கும் பக்தர்கள்
நாகை மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த நிகழ்வின் போது, சிங்காரவேலவர், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்கும் நிகழ்ச்சி வரும் ஆறாம் தேதி நடைபெறுகிறது. வேல் வாங்கும் போது, முருக பெருமானுக்கு முகத்தில் வியர்வை சிந்தும் அற்புத காட்சியும் நிகழவுள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணியில் உள்ள மலைகிணறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.
இதேபோல் தென்காசி மாவட்டம் சங்கர நாராயண சுவாமி கோயிலில் உள்ள சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.