பால் கறக்கும் போது சைலண்டாக வந்த சிறுத்தை! உயிரை கையில் பிடித்து ஓடிய பெண்... திருவண்ணாமலை பரபரப்பு

Update: 2024-12-31 13:03 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, துப்பாக்கி ஏந்திய வனக்காவலர் உதவியுடன், சிறுத்தை புலி தேடுதல் பணியை, வனத்துறையினர் தீவிர படுத்தியுள்ளனர். பாடகம் காப்பு காடு பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர், துப்பாக்கி ஏந்திய வன காவலர் உடன், சிறுத்தைப் புலியை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை புலி சென்று வந்த இடங்கள் மற்றும் கால் தடம் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், துருவம் பகுதியில் தங்கள் மாட்டு கொட்டகையில் பால் கறக்கும் போது, சிறுத்தை அருகே வந்ததாகவும், அப்போது அலறி அடித்துக்கொண்டு அப்பகுதியை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்