காலத்துக்கும் ரசிகர்கள் மறக்காத 'வசந்த மாளிகை' ரீ ரிலீஸ்.. ரசிகர்கள் கட் அவுட் வைத்து மகிழ்ச்சி
சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளை கடந்த நிலையில், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு நெல்லையில் உள்ள திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அங்கு 30 அடி உயரத்திற்கு வைக்கப்பட்ட சிவாஜி கணேசனின் கட் அவுட்டிற்கு மாலை அணிவித்து, நூறு தேங்காய்களை உடைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு பட்டாசுகளை வெடித்த ரசிகர்கள், சாலையில் சென்றோருக்கு இனிப்புகளை வழங்கினர்.