டிக்கெட் கேட்ட கண்டக்டர்... செய்ய கூடாததை செய்த போதை ஆசாமி - அதிர்ச்சி காட்சிகள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், அரசுப்பேருந்து நடத்துநரை மதுபோதை ஆசாமி தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிபாளையம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் ஏறிய மதுபோதை ஆசாமியிடம், நடத்துநர் டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, நடத்துநரின் சட்டையை பிடித்து தாக்க முயன்றார். பயணிகள் அந்த நபரை மீட்டு, வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பயணி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.