இரவில் திடீரென கடைகளை இடிக்க வந்த அதிகாரிகள்...கொந்தளித்த வியாபாரிகள் - சென்னையில் பரபரப்பு
சென்னையில் கடைகளை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை எண்ணூரில் உள்ள பழமையான நூலகத்திற்கு பின்புறம், அரசு சார்பில் சந்தை கட்டப்பட்டு வருகிறது. அதற்கு நுழைவு வாயில் வேண்டும் என்பதற்காக, மாநகராட்சி அதிகாரிகள் திடீரென அங்குள்ள கடைகளை அகற்ற இரவில் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் கடை நடத்தி வருவதாகவும், எந்த முன்னறிவிப்பும் இன்றி கடைகளை இடிக்க வந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். இதனால் கடைகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நூலகம் மட்டும் அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.