ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணி போஸ்டர் யுத்தம்... ஒரே இடத்தில் கூடி ஒரே மாறி சொன்ன நிர்வாகிகள்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணி போஸ்டர் யுத்தம்... ஒரே இடத்தில் கூடி ஒரே மாறி சொன்ன நிர்வாகிகள்
சிவகங்கையில் போஸ்டர் யுத்தம் காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாறி மாறி புகார் கொடுத்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன், அதிமுகவின் ஒரு தரப்பினர் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதனை மாற்றக் கோரி போஸ்டர் ஒட்டியிருந்தனர். அதற்குப் பதில் அளித்த செந்தில்நாதன், ஓ.பன்னீர் செல்வத்தின் அணியினர்தான் கட்சிக்குள் பூசலை ஏற்படுத்துவதாகத் தெரிவித்து, சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் அசோகன், அவர்களுக்குள் நடக்கும் பூசலை மூடி மறைக்க தங்கள் மீது குற்றம் சுமத்துவதாக கூறி, சிவகங்கை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
எடப்பாடி அணியினரின் ஊழல்களை வெளிக்கொண்டு வரும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.