கன்னியாகுமரியில் புதிய கண்ணாடி கூண்டு பாலத்தை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ரசித்தனர். கண்ணாடி பாலத்தை கடந்த 30ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக 4 நாட்கள் படகு சேவை நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று காற்றின் வேகம் குறைந்ததால், வழக்கம் போல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தொடங்கியது. இதனையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்ததோடு, கண்ணாடி கூண்டு பாலத்தில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.