'மனித உறுப்பு' - பேக்கரி பன்னை பிரித்து வாய்க்குள் வைக்கும் போது அதிர்ச்சி
திருப்பூர் ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள பேக்கரியில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பன்னில், மனிதப் பல் இருந்த வீடியோ வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் தனது குழந்தைகளுக்கு பேக்கரியில் பன் வாங்கிக்கொடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பன்னில் பல் இருந்ததாகக்கூறி, அதுகுறித்து பேக்கரி உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.