வீட்டில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை - மகன் அதிர்ச்சி

Update: 2024-12-06 02:10 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தூக்கில் தொங்கியபடி தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கட்டாபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் நூல் பின்னும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சிவக்குமார், தனது மனைவி ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக மகன் சந்துருவிடம் கூறியுள்ளார். முதலில் நம்பாத சந்துரு, தந்தை அனுப்பிய புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, தந்தை சிவக்குமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். சிவக்குமார் புதிய வீடு கட்டுவதற்காக கடன் பெற்றிருந்ததாகவும், கடனை வசூலிக்க வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்