அவகாசம் கேட்ட மக்கள்..! அதிரடி காட்டிய அதிகாரிகள்..கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மக்கள்

Update: 2024-12-23 02:01 GMT

குளித்தலை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட 10 வீடுகள் அகற்றப்பட்ட நிலையில், வேறு இடங்களுக்கு செல்லாமல் இடிபாடுகளுக்கு இடையே வசித்து வருகின்றனர்.

Vovt

கரூர் மாவட்டம் தண்ணீர்பள்ளி சீனிவாசா நகரில், 50 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் 10 மேற்பட்ட வீடுகள் கட்டி சிலர் வசித்து வந்த‌னர். அங்கு இருந்த இடம், நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டது. தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 19ஆம் தேதி இடிக்கப்பட்டன. இந்நிலையில், வீட்டின் இடிபாடுகளுக்கு இடையே, ஆபத்தை பொருட்படுத்தாமல், சிலர் அங்கேயே வசித்து வருகின்றனர். மார்கழி மாதம் என்பதால் தங்களுக்கு யாரும் வீடு கொடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர். அவ்வப்போது பெய்யும் மழையில் தூக்கத்தை தொலைத்துள்ளதாகவும், எதாவது ஒரு இடம் கொடுத்தால் கொட்டகை போட்டுக்கொள்வோம் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்