சென்னை வேளச்சேரியில் பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி உபசரித்தார். பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திமுக மத வேற்றுமையை விதைக்கிறது என்றும், பாஜகதான் ஒற்றுமையை விதைக்கிறது என்றும் அவர் கூறினார்.