திடீரென இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-12-23 01:56 GMT

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் கூரையின் மேல் பூச்சு திடீரென இடிந்து விழுந்ததால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

vovt

சென்னை தி நகர் தொகுதிக்குட்பட்ட மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெருவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. 1973 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு எவ்வித பராமரிப்பும் இல்லாமல் மிகுந்த ஆபத்தான நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், குடியிருப்பின் தரைத்தளத்தில் வசிக்கும் விஜயகுமார் என்பவரின் வீட்டின் கூரையின் மேல் பூச்சு திடீரென இடிந்து விழுந்து உள்ளது. கட்டிட பூச்சி இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் அந்த அறையில் இருந்த கட்டில் மீது விஜயகுமார் படுத்திருந்துள்ளார். கழிவறைக்கு அவர் சென்றதால் அதிர்ஷ்டவசமாக தப்பித்திருகிறார். இதனால் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்