த.வெ.க சார்பில் கிறிஸ்துமஸ் விழா.. ரஜினியை மறைமுகமாக அட்டாக் செய்த தாடி பாலாஜி
அரசியலுக்கு வருவேன் என்று கூறிவிட்டு வராமல் இருந்தவர் அல்ல விஜய் என்று, நடிகர் தாடி பாலாஜி மறைமுகமாக ரஜினியை விமர்சித்துள்ளார். சென்னை எர்ணாவூரில், தமிழக வெற்றி கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில், நடிகர் தாடி பாலாஜி கலந்து கொண்டு கேக் வெட்டி, தூய்மை பணியாளர்கள் உட்பட ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாடி பாலாஜி, அரசியலுக்கு வருவார் வருவார் எனக் கூறிவிட்டு வராமல் போனவர் அல்ல என்றும், கட்சி கொடியை அறிமுகப்படுத்தி மாநாடு நடத்தி காட்டியவர் விஜய் என்றும் கூறினார். மேலும், ஈரோடு இடைத்தேர்தலில் த.வெ.க போட்டியிடுவது குறித்து, விஜய் முடிவு செய்வார் என்று நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.