இன்று முதல் 25 நாட்களுக்கு திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரத்து - தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே இன்று முதல் 25 நாட்களுக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தம்..
திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரையில் ரயில் பயணிகள் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாதையில் பாசஞ்சர் ரயில் தவிர செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் என மொத்தம் 14 ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே ரயில் பாதை சீரமைப்பு பணி நடந்து வருகின்ற காரணத்தினால் திருநெல்வேலி திருச்செந்தூர், திருச்செந்தூர் திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் இன்று மார்ச் 20 ஆம் தேதி முதல் 25 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்து இருந்தது.
அதன்படி திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் மட்டும் இன்று மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.