போதையை போட்டு சலம்பிய டாஸ்மாக் விற்பனையாளர் - தேடிவந்த ஆப்பு

Update: 2025-03-21 08:04 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மதுபோதையில் குவாட்டர் பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்றதாக எழுந்த புகாரில், கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பந்தலூர் நகர பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையில், கடந்த 15-ம் தேதி, வாடிக்கையாளர்கள் மதுபானம் வாங்கச் சென்றபோது, விற்பனையாளர் மகேஷ் அதிக மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வாடிக்கையாளரிடம் குவாட்டர் பாட்டிலுக்கு 40 ரூபாய் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விற்பனையாளர் மகேஷை அழைத்து விளக்கம் கேட்ட டாஸ்மாக் நிர்வாகம், அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்