"இதுக்கெல்லாம் PROOF-கேட்டு சங்கடப் படுத்துவீங்களா?"-அதிரடி உத்தரவு போட்ட கோர்ட்

Update: 2025-03-21 07:15 GMT

மறுமணத்திற்கு ஆதாரம் இல்லை என கூறி மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட குடவாசல் நீதிமன்ற பெண் உதவியாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, live in உறவு முறையை உச்ச நீதிமன்றமே அங்கீகரித்துள்ள நிலையில், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பழமைவாத போக்கில், மனிதத்தன்மையற்ற முறையில் செயல்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

மேலும், பெண் ஊழியருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டனர். திருமணமான பெண்களுக்கு தான் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது... திருமணம் பதிவு செய்திருக்க வேண்டிய கட்டாயமில்லை எனவும், திருமணம் குறித்து சந்தேகத்துக்கு இடமில்லாத ஆதாரங்களை கேட்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்