திருச்செந்தூர் கோயிலுக்கு படையெடுக்கும் மக்கள் - நகர் முழுவதும் விழாக்கோலம்

Update: 2025-01-10 14:23 GMT

தை மாத பிறப்பினையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். மதுரை, நெல்லை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரை மேற்கொண்டனர். சிறுவர், சிறுமியர் முதல் பெரியோர் வரை சிவன், பார்வதி, முருகன், அர்த்தநாரீஸ்வரர், சுடலை போன்று மாறுவேடம் அணிந்து பாதயாத்திரையில் பங்கேற்றனர். இதனால் திருச்செந்தூர் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்