கொலை வழக்கில் உள்ளே சென்று வந்தவரை கோர்ட் வாசலிலேயே தண்டித்த கர்மா - ஷாக்கிங் வீடியோ

Update: 2025-01-10 16:43 GMT

கர்நாடக மாநிலம் கலபுரகி அருகே ஜெவர்கி நகரில் நீதிமன்ற வளாகத்தில், இளைஞர் ஒருவரை 3 பேர் கொடூரமாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாத்தனூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரா என்பவர், கொலை வழக்கில் பரோலில் வந்துள்ளார். அவரால் கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்கள், தேவேந்திராவை நீதிமன்ற வளாகத்திலேயே கல்லால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தனர். படுகாயமடைந்த தேவேந்திரா, கலபுரகி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்