தேர்தல் ஆணையத்தில் பதிவு பெறாத, தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகளை தடை விதக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொது நல வழக்கில்,
தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. பாதுகாப்பு குழு, தமிழக காவல்துறை தலைவர் தலைமையில் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட கோரியுள்ளார்.
வெறுப்புணர்வை தூண்டும் அனைத்து சாதிய கட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட கோரியுள்ளார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக ஆதி திராவிட நலத்துறையின் செயலர், தமிழக காவல்துறை தலைவர்,
தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.