247-வது முறையாக வேட்புமனு - ரூ.1 கோடி செலவு செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்

Update: 2025-01-10 16:50 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் பண்டிகை என அரசு விடுமுறை தவிர்த்து 10,13,17 ஆகிய மூன்று தேதிகளில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று, சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், முதல் நபராக வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் தாக்கல் செய்தார். இதன் மூலம் 247வது தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வாஜ்பாய், மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக போட்டியிட்டு, அனைத்து தேர்தலிலும் தோல்வியை தழுவிய தேர்தல் மன்னன் பத்மராஜன், வேட்புமனு தாக்கலுக்காக இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்